தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நேற்று (ஜன.19) தொடங்கியது. இதில் மகளிர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் - தாய்லாந்தின் ராட்சனோக் இன்டனானை (Ratchanok Intanon) எதிர்கொண்டார்.
பரபரப்புடன் தொடங்கிய இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராட்சனோக் இன்டனான் 21-17, 21-08 என்ற நேர் செட் கணக்கில் இந்தியாவின் சாய்னா நேவாலை வீழ்த்தினார். இதன் மூலம் சாய்னா நேவால் முதல் சுற்றோடு தொடரிலிருந்து வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் சமீர் வெர்மா - மலேசியாவின் லீ ஸி ஜியாவை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் செட்டை லீ ஸி ஜியா 21 18 என்ற கணக்கில் கைப்பற்றினார்.