உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் மூலம் 1977ஆம் ஆண்டு முதல் 'உலக பேட்ட்மிண்டன் சாம்பியன்ஷிப்' போட்டி நடத்தப்படுகிறது. இதன் 25ஆவது சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் சுவிட்சர்லாந்தின் பெசெல் நகரில் நடைபெற்றுவருகின்றன.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இந்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆண்கள், பெண்கள் பிரிவில் வெற்றி பெறுபவர்கள் உலக சாம்பியனாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு தங்கப்பதக்கமும், பரிசுத் தொகையும் வழங்கப்பட்டும்.
இதில் உலக பேட்மிண்டன் கூட்டமைப்பில் உள்ள 176 நாடுகள் கலந்துகொள்கின்றன. இந்தியா சார்பில் நட்சத்திர வீரர்களான பி.வி சிந்து, சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய் பிரனீத் ஆகியோர் பங்கு பெறுகிறார்கள்.
கடந்த 2017,2018ஆம் ஆண்டு நடைப்பெற்ற உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிகளில் இந்தியாவின் பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.