தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தாய்லாந்து ஓபன்: இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய சிந்து, ஸ்ரீகாந்த்!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இன்று (ஜன.19) நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

Thailand Open: Sindhu beat Busanan to enter second round
Thailand Open: Sindhu beat Busanan to enter second round

By

Published : Jan 19, 2021, 11:37 AM IST

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் இன்று (ஜன.19) தொடங்கியது. இதில் மகளிர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து - தாய்லாந்தின் புசனன் ஓங்பாம்ருங்பான் (Busanan Ongbamrungphan) எதிர்கொண்டார்.

பரபரப்புடன் தொடங்கிய இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து 21-17, 21-13 என்ற நேர் செட் கணக்கில் புசனனை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் - தாய்லாந்தின் சித்திகோம் தம்மசின் (Sitthikom Thammasin) உடன் மோதினார். இதில் முதல் செட்டை 21-11 என்ற கணக்கில் கைப்பற்றிய ஸ்ரீகாந்த், இரண்டாவது செட்டையும் 21-11 என கைப்பற்றி அசத்தினார்.

இதன் மூலம் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-11, 21-11 என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்தின் சித்திகோம் தம்மசினை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

இதையும் படிங்க: ஐஎஸ்எல்: புள்ளிப்பட்டியலில் முன்னேறுவது யார்? ஹைதராபாத் எஃப்சி - ஒடிசா எஃப்சி!

ABOUT THE AUTHOR

...view details