பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி இணை - ஜெர்மனியின் மார்க் லாம்ஸ்ஃபு, இசபெல் ஹெர்ட்ரிக் இணையை எதிர்கொண்டது.
பரபரப்புடன் தொடங்கிய இப்போட்டியில் பொன்னப்பா இணை 22-20 என்ற கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இரண்டாவது செட்டை 21-14 என்ற கணக்கில் மார்க் இணை கைப்பற்றி அசத்தியது. இதனால் இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற பரபரப்பு அதிகரித்தது.