சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று முதல் (ஜன. 12) முதல் ஜனவரி 17ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.
இத்தொடருக்கான 8 பேர் கொண்ட இந்திய பேட்மிண்டன் அணி கடந்த 3ஆம் தேதி தாய்லாந்திற்கு சென்றடைந்தது. அங்கு அவர்களுக்கு கரோனா கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பயிற்சி பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து இத்தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால், மலேசியாவின் கிசோனா செல்வதுரையை எதிர்கொள்ள இருந்தார். இந்நிலையில் சாய்னா நேவாலிற்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையின் முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.