தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

குடியரசு துணைத் தலைவரிடம் வாழ்த்துபெற்ற தங்கமங்கை! - துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடுவை அவரது இல்லத்தில் சந்தித்தார்

ஹைதராபாத்: பேட்மிண்டன் வீராங்கனை பி. வி. சிந்து, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்து வாழ்த்துபெற்றார்.

பி.வி.சிந்து

By

Published : Aug 31, 2019, 10:58 PM IST

25ஆவது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள பர்செல் நகரில் நடந்தது. இதில், பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி. வி. சிந்து, ஜப்பானின் ஒகுஹாராவை சந்தித்தார். இறுதியில் 21-7, 21-7 என்ற நேர்செட் கணக்கில் ஜப்பானின் ஒகுஹாராவை வீழ்த்தி பி. வி. சிந்து தங்கம் வென்று உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மனை என்ற சாதனையை படைத்தார்.

பி.வி.சிந்து, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவை இல்லத்தில்

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதுமட்டுமின்றி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, முன்னாள் தடகள வீராங்கனை பி. டி. உஷா, திமுக தலைவர் மு. க ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

பி.வி. சிந்து குடும்பத்துடன் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்த போது

இந்நிலையில்,பேட்மிண்டன் வீராங்கனை பி. வி. சிந்து தன் குடும்பத்துடன் தெலுங்கானா தலைநகரம் ஐதராபாத்தில் உள்ள குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார். அப்போது, அவர் வென்ற தங்கப் பதக்கத்தை காட்டி வெங்கையா நாயுடுவிடம் வாழ்த்துபெற்றார்.

ABOUT THE AUTHOR

...view details