தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஸ்விஸ் ஓபன்: வெர்மாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஸ்ரீகாந்த்! - சமீர் வெர்மா

ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இன்று நடைபெற்ற முதல்சுற்றுப் போட்டியில் இந்தியாவின் கிதாம்பி ஸ்ரீகாந்த், சக வீரரான சமீர் வெர்மாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Swiss Open: Srikanth defeats Verma, advances to 2nd round
Swiss Open: Srikanth defeats Verma, advances to 2nd round

By

Published : Mar 3, 2021, 7:42 PM IST

நடப்பு ஆண்டிற்கான ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் சுவிட்சர்லாந்தில் இன்று தொடங்கியது. இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல்சுற்றுப் போட்டியில் இந்தியாவின் கிதாம்பி ஸ்ரீகாந்த், சக வீரரான சமீர் வெர்மாவுடன் மோதினார்.

பரபரப்பான இப்போட்டியின் முதல்செட்டை சமீர் வெர்மா 21-18 என்ற கணக்கில் கைப்பற்றினார். அதன்பின் சுதாரித்து விளையாடிய ஸ்ரீகாந்த் 21-18 என்ற கணக்கில் இரண்டாவது செட்டைக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

இதையடுத்து நடைபெற்ற மூன்றாவது செட் ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய ஸ்ரீகாந்த் 21-11 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி சமீர் வெர்மாவுக்கு அதிர்ச்சியளித்தார்.

இதன்மூலம் கிதாம்பி ஸ்ரீகாந்த் 18-21, 21-18, 21-11 என்ற செட் கணக்கில் சமீர் வெர்மாவை வீழ்த்தி ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இதையும் படிங்க:சீரி ஏ: ஸ்பீசியாவை வீழ்த்தி ஜுவென்டஸ் அபார வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details