தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து வெளியேறிய இந்திய இணை! - சிராக் ஷெட்டி

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

Swiss Open: Chirag-Satwiksairaj knocked out of men's doubles
Swiss Open: Chirag-Satwiksairaj knocked out of men's doubles

By

Published : Mar 7, 2021, 10:54 AM IST

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. நேற்று(மார்ச்.6) நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை, டேனீஷ் நாட்டின் கிம் அஸ்ட்ரூப், ஆண்டர்ஸ் ஸ்காரூப் ராஸ்முசென் இணையை எதிர்கொண்டது.

பெரும் எதிர்பார்ப்புகளுடன் நடைபெற்ற இப்போட்டியில், டேனீஷ் இணை தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் செட்டை 21-10 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 21-17 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

இவர்களை எதிர்த்து ஆடிய இந்திய இணை 10-21, 17-21 என்ற நேர் செட் கணக்கில் டேனீஷ் இணையிடம் தோல்விடைந்து, சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி சுற்றோடு வெளியேறியது. அரையிறுதி சுற்றோடு இந்திய இணை வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

இதையும் படிங்க: 4ஆவது டெஸ்ட்: இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details