தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மன்னிப்பு கடிதம் அனுப்பிய கிடாம்பி ஸ்ரீகாந்த்: கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரை! - கிடாம்பி ஸ்ரீகாந்த்

ஆசிய சாம்பியன்ஷிப் தொடரின்போது பாதியிலேயே இந்திய அணியை விட்டு விலகிய கிடாம்பி ஸ்ரீகாந்த் இந்திய பேட்மிண்டன் சம்மேளனத்திற்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியதையடுத்து, அவரின் பெயர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

srikanth-recommended-for-khel-ratna-after-apologising-to-bai
srikanth-recommended-for-khel-ratna-after-apologising-to-bai

By

Published : Jun 20, 2020, 3:34 AM IST

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப் போட்டியின்போது இந்திய வீரர்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரனாய் ஆகியோர் அணியை விட்டு பாதியிலேயே வெளியேறினர். இதனால் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி இந்தோனேஷியாவிடம் தோல்வியடைந்தது.

கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரனாய் ஆகியோரின் இந்த நடவடிக்கைகளின் காரணமாக இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் இவர்களின் பெயர்களை தேசிய அளவிலான விருதுகளுக்குப் பரிந்துரைக்கவில்லை. இந்நிலையில் கிடாம்பி ஸ்ரீகாந்த் இந்திய பேட்மிண்டன் சம்மேளனத்திற்கு தனது மன்னிப்பு கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், இனி ஒருபோதும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என உறுதியளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிஏஐ செயலாளர் அஜய் சிங்கானியா, கிடாம்பி ஸ்ரீகாந்தின் பெயரை மத்திய அரசின் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details