உலகக் கோப்பை துப்பாக்கிச் சுட்டுத் தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. புல்வாமா தாக்குதலின் எதிரொலியாக இதில், ஆடவர் பிரிவுக்கான 25 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் பங்கேற்கவிருந்த இரண்டு பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியா விசா வழங்க மறுத்தது. இதனால், அதிருப்தி அடைந்த சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில், இந்தியாவில் இனி சர்வதேச விளையாட்டுத் தொடர்களை நடத்த தற்காலிக தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்திய ஓபன் பேட்மிண்டன் திட்டமிட்டப்படி நடைபெறுமா..? - BWF
இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் திட்டமிட்டப்படி நடைபெறும் என உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் வரும் மார்ச் 26 ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் இந்தியா மீது தற்காலிக தடை விதித்துள்ளதால், இந்த தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு கூறியிருப்பதாவது,
டெல்லியில் இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரை ரத்து செய்வது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலிடம் இருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை. இதனால், இந்த தொடர் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தெரிவித்தது. இந்த தொடரில், இந்திய வீராங்கனை பிவி சிந்து, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா, இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த போன்ற நட்சத்திர வீரர் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.