தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தெற்காசிய போட்டி: 4 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள்! - South Asian Games Badminton

நேபாளத்தில் நடைபெற்றுவரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டின் பேட்மிண்டன்  பிரிவில் இந்திய வீரர்கள் நான்கு தங்கம், இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மொத்தம் எட்டு பதக்கங்களை வென்றுள்ளனர்.

badminton
badminton

By

Published : Dec 7, 2019, 4:16 PM IST

நேபாள தலைநகர் காத்மாண்டு, போக்ஹராவில் 13ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில், ஏற்கனேவே ஆடவர், மகளிர் அணிகளுக்கான பேட்மிண்டன் பிரிவில் இந்தியா தங்கம் வென்று அசத்தியிருந்தது. இந்நிலையில், பேட்மிண்டனில் ஆடவர், மகளிர், ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுக்கான போட்டிகள் நடைபெற்றன.

இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிரில் வர்மா 17-21, 23-21, 21-13 என்ற செட் கணக்கில் சக வீரர் அர்யமான் தந்தோனை (Aryaman Tandon) வீழ்த்தி தங்கம் வென்றார். இப்போட்டியில் தோல்வியுற்ற அர்யமானுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்து. இதேபோல, ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் கிருஷ்ணா-துருவ் ஜோடி, இலங்கையின் சச்சின் பரமேஸன்-புவனேக்கா திரிண்டுவை 21-19, 19-21, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது.

இதையடுத்து, மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை அஷ்மித்தா 21-18, 25-23 என்ற நேர் செட் கணக்கில் பயிற்சியாளர் கோபிசந்தின் மகள் காயத்திரி கோபிசந்தை தோற்கடித்து தங்கம் வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் கபிலா-மேகனா இணை 21-16, 21-14 என்ற நேர் செட் கணக்கில் இலங்கையின் சச்சின் பரேமேஸன்- தில்லினி பிரமோதிகா ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது.

முன்னதாக, மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிக்கி ரெட்டி-மேகனா மற்றும் குஹூ கார்க்- அனோஷ்கா பரிக் ஜோடி வெண்கலம் வென்றிருந்தது. இந்திய வீரர்கள் பேட்மிண்டன் பிரிவில் நான்கு தங்கம், இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மொத்தம் எட்டுப் பதக்கங்களை வென்றுள்ளனர். இதன்மூலம், இந்தியா 89 தங்கம், 61 வெள்ளி, 27 வெண்கலம் என மொத்தம் 177 பதக்கங்களை குவித்து முதலிடத்தில் உள்ளது.

இதையும் படிங்க:வளர்ந்து வரும் வீரர் விருதுப் பட்டியலில் இடம்பெற்ற இந்திய ஜோடி!

ABOUT THE AUTHOR

...view details