தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சிங்கப்பூர் ஓபனில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய பிரணாய், கிடாம்பி ஸ்ரீகாந்த்! - பிரணாய்

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டியில் வெற்றிபெற்ற இந்தியாவின் பிரணாய், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

சிங்கப்பூர்

By

Published : Apr 11, 2019, 12:44 PM IST


சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் முதல் சுற்றில் பிரான்ஸ் வீரர் பிரைஸ் லெவர்டஸை எதிர்த்து ஆறாம் நிலை வீரரான இந்தியாவின் பிரணாய் மோதினார்.

அதில் தொடக்கத்திலிருந்தே அபாரமாக ஆடிய பிரைஸ் 21-11 என்ற கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார். இதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் செட்டில் சுதாரித்துக்கொண்ட பிரணாய் 16-21 எனக் கைப்பற்ற, வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் 18-21 என்ற கணக்கில் பிரணாய் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 63 நிமிடங்கள் நீடித்தது.

இரண்டாவது செட்டில் இந்தியாவின் பிரணாய் முதல் நிலை வீரரான ஜப்பானின் கெண்டோ மொமொடாவை எதிர்கொள்கிறார்.

மற்றொரு போட்டியில் இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்தை எதிர்த்து தாய்லாந்து வீரர் தம்மாஸின் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய கிடாம்பி 21-17, 21-18 என்ற நேர் செட்களில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இரண்டாவது சுற்றில் டானிஷ் வீரர் ஹான்ஸ் கிறிஸ்டனை எதிர்த்து ஆடுகிறார்.

ABOUT THE AUTHOR

...view details