உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவிற்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார் நட்சத்திர வீரங்கனை பி.வி.சிந்து.
இந்த வெற்றி குறித்து சிந்து, ‘கடந்த முறை இதற்கான வாய்ப்பை நான் கரோலினாவிடம் இழந்தேன். ஆனால் இந்தமுறை அதை நான் பூர்த்தி செய்து தங்கம் வென்றுள்ளேன்’ என கூறியுள்ளார்.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற பி.வி.சிந்து இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் பேட்மிண்டன் வீரரும், 1983ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்றவருமான பிரகாஷ் படுகோனே, பி.வி. சிந்துவின் வெற்றிக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், சிந்து சிறப்பாக செயல்பட்டு ஜப்பானின் நோசோமி ஒகுஹாராவை வீழ்த்தி சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆனால் அவர் இதோடு நிற்காமல் 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் விளையாட்டில் தங்கம் வெல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.