டெல்லி:ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி. சிந்து உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் தடகள ஆணைய உறுப்பினராக இன்று நியமிக்கப்பட்டார். இந்த பதவியில் சிந்து 2025 வரை இருப்பார்.
இவருடன் ஐரிஸ் வாங் (அமெரிக்கா), ராபின் டேபிலிங் (நெதர்லாந்து), கிரேசியா பாலி (இந்தோனேசியா), கிம் சோயோங் (கொரியா), செங் சி வெய் (சீனா) ஆகிய ஐந்து பேரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆணையத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் விரைவில் நியமனம் செய்யப்படுவர்.