ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பேட்மிண்டன்: அரையிறுதிச் சுற்றில் சவுரப் வர்மா! - Vietnam Open Badminton

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் சவுரப் வர்மா முன்னேறியுள்ளார்.

Sourabh Verma
author img

By

Published : Sep 13, 2019, 10:53 PM IST

2019ஆம் ஆண்டுக்கான வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், இந்திய வீரர் சவுரப் வர்மா ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜப்பான் வீரர் கோடாய் நரோராகா, யூ இகார்ஷா ஆகியோரை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் அவர், வியாட்நாமின் குயேன் தியேன் (Nguyen Tien Minh) உடன் மோதினார். இதில், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சவுரப் வர்மா 21-13, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள அரையிறுதிச் சுற்றில் அவர், ஜப்பான் வீரர் மினோரு கோகாவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார். முன்னதாக, ஃபோர்ஸா ஸ்லோவேனியா சர்வதேச தொடரில் சவுரப் வர்மா 21-17, 21-12 என்ற நேர் செட் கணக்கில் மினோரு கோகாவை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

author-img

...view details