டென்மார்க் நாட்டில் இம்மாதம் நடைபெறவுள்ள ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்பதற்காக, இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் பெங்களூருவிலிருந்து டென்மார்க்கிற்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் மூலம் பயணம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது.
மேலும் விமானத்தில் பயணிக்கும் வீரர்கள் விசா, கரோனா சோதனை சான்றிதழ், போட்டி அழைப்பிதல் ஆகியவற்றையும் சமர்பிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
இதையடுத்து லக்ஷ்ய சென், கிடாம்பி ஸ்ரீகாந்த், சுபங்கர், அஜய் ஜெய்ராம் ஆகியோர் விமான நிலையத்திற்குச் சென்றுள்ளனர். ஆனால், இவர்களில் அஜய் ஜெய்ராமுக்கு மட்டும், விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அஜய் ஜெய்ராம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "டென்மார்க் ஓபனுக்காக நான் இன்று இரவு பெங்களூரிலிருந்து டென்மார்க் செல்ல வேண்டும். என்னிடம் கரோனா பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழ், சி வகை விசா, போட்டி அமைப்பாளர்களிடமிருந்து வந்த அழைப்புக் கடிதம் ஆகிய அனைத்தும் உள்ளது. இருப்பினும் ஏர் பிரான்ஸில் நான் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது என்னால் ஏர் பிரான்ஸில் பயணிக்க முடியுமா என்பதைனை தயவு செய்து தெரியப்படுத்துங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அஜய் ஜெய்ராஜ், இச்சம்பவம் குறித்து இந்திய விளையாட்டு அமைச்சகத்திற்கும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரேன் ரிஜ்ஜூவிற்கும் தெரியப்படுத்தியுள்ளார். இந்திய வீரர் விமானத்தில் பறக்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெங்களூரு விமான நிலையத்தில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : தன்னுடைய கிரிக்கெட் ஹீரோக்கள் குறித்து மனம் திறந்த சச்சின்