இந்திய பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் ஜோடியான ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் உலக சாம்பியன்களான சீனாவின் லி ஜுன் ஹுய், லியு யு சென் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இதன்மூலம் பி.டபுள்யூ.எஃப். சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரில் பட்டம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை அவர்கள் பெற்றனர்.
பேட்மிண்டன் தரவரிசையில் 10 இடங்களுக்குள் முன்னேறிய இந்திய ஆடவர் இணை
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரில் இரண்டாம் இடம்பிடித்த இந்திய ஆடவர் இணை சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஆகியோர் உலக தரவரிசையில் பத்து இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தால் இந்த இணை கடந்த வாரம் பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் இணையான இந்தோனேசியாவின் மார்கஸ் பெர்னால்டி கிதியோன்-கெவின் சஞ்சய் சுகமுல்ஜோவை எதிர்கொண்ட சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி இணை தோல்வியைத் தழுவியது. இந்த இணை இத்தொடரில் பங்கேற்றிருந்தபோது உலக தரவரிசையில் 11ஆவது இடத்தில் இருந்தது.
இதனிடையே சமீபத்தில் வெளியிடப்பட்ட பேட்மிண்டன் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் இரட்டையர் பிரிவில் இந்திய இணையான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகியோர் இரண்டு இடங்கள் முன்னேறி ஒன்பதாவது இடத்தில் உள்ளனர். பிரெஞ்சு ஓபன் தொடரில் அவர்கள் இருவரும் முன்னதாக ஜப்பான், இந்தோனேசிய இணைகளை வீழ்த்தியிருந்தனர். இந்திய இணை உலக தரவரிசையில் பத்து இடங்களுக்குள் முன்னேறுவது இது இரண்டாவது முறையாகும்.