தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வளர்ந்து வரும் வீரர் விருதுப் பட்டியலில் இடம்பெற்ற இந்திய ஜோடி! - சத்விக்சாய்ராஜ் / சிராக் ஷெட்டி பிரிந்துரை

நடப்பு ஆண்டின் மிகவும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான விருதுப் பட்டியலில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

Satwiksairaj rankireddy, chirag shetty
Satwiksairaj rankireddy, chirag shetty

By

Published : Dec 5, 2019, 2:18 PM IST

ஒவ்வொரு ஆண்டிலும் பேட்மிண்டன் தொடர்களில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு பி.டபள்யூ.எஃப் (BWF) சார்பில் மிகவும் வளர்ந்து வரும் வீரருக்கான விருது (Most improved Player of the Year) வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு ஆண்டின் மிகவும் வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளna. அதில், ஆடவர், மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் எந்த ஒரு வீரரின் பெயரும் இடம்பெறவில்லை.

ஆகஸ்ட் மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில், மகளிர் ஒற்றையர் பிரிவு சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவின் பெயரும் இதில் இடம்பெறாதது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடரையடுத்து நடைபெற்ற பல முக்கியமான தொடர்களில் அவர் முதலரண்டு சுற்றுகளிலேயே வெளியேறிதுதான் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி

இந்த நிலையில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பில் சத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகியோரது பெயர்கள் பிரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்த விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர். நடப்பு ஆண்டில் சத்விக்சாய்ராஜ் / சிராக் ஷெட்டி ஜோடி ஆடவர் இரட்டையர் பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. குறிப்பாக, பாங்காக்கில் நடைபெற்ற தாய்லாந்து ஓபன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவுப் பட்டத்தை இந்த ஜோடி வென்றது நினைவுகூரத்தக்கது.

அதேபோல, பாரா பேட்மிண்டன் வீரர்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய பாரா பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத்தின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் சிறப்பாக விளையாடிய இவர், இதுவரை 11 தங்கம், மூன்று வெள்ளி, நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details