ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை - ஸ்காட்லாந்தின் கிறிஸ்டோபர் கிரிம்லி, மத்தேயூ கிரிம்லி இணையுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரங்கிரெட்டி இணை 21-18, 19-21, 21-16 என்ற செட் கணக்கில் கிரிம்லி இணையை வீழ்த்தி, ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது. அதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில், அஸ்வினி பொன்னப்பா, ரங்கிரெட்டி இணை - இந்தோனேஷியாவின் ஹபீஸ் பைசல், குளோரியா இமானுவேல் இணையை எதிர்கொண்டது.