2019ஆம் ஆண்டுக்கான மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர்கோலாலம்பூரில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் சமீர் வர்மா, சீனாவின் ஷி யூகியை எதிர்கொண்டார்.
பேட்மிண்டன்: முதல் சுற்றுடன் நடையைக் கட்டிய சமீர் வர்மா - மலேசிய ஓபன் பேட்மிண்டன்
கோலாலம்பூர்: மலேசிய ஓபன் டென்னிஸ் தொடரில், ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் சமீர் வர்மா அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளார்.
![பேட்மிண்டன்: முதல் சுற்றுடன் நடையைக் கட்டிய சமீர் வர்மா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2890265-759-ced8f665-5d32-4226-b272-e9fc2b2d926c.jpg)
ஆட்டத்தின் முதல் செட்டை 20-22 என்ற கணக்கில் போராடித் தோல்வி அடைந்த சமீர் வர்மா, இரண்டாவது செட்டில் எழுச்சி பெற்று 23-21 என்ற கணக்கில் வெற்றிபெற்றார். இதனால், ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில், சமீர் வர்மா 12-21 என்ற கணக்கில் ஷி யூகியிடம் வீழ்ந்தார். இதன் மூலம் சமீர் வர்மா, 20-22, 23-21,12-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
இதேபோல் நடைபெற்ற மற்றொரு முதல் சுற்றில், இந்திய வீரர் ஹெச்.எஸ்.பிரணாய், தாய்லாந்தின் சித்திகோம் தமாசினிடம் 21-12, 16-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.