தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மலேசியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய சாய்னா, சிந்து - PV Sindhu in Malaysia Masters

கோலாலம்பூர்: மலேசியான் மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனைகளான சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

Saina Nehwal, PV Sindhu enters second round of Malaysia Masters
Saina Nehwal, PV Sindhu enters second round of Malaysia Masters

By

Published : Jan 8, 2020, 10:28 PM IST

2020ஆம் ஆண்டுக்கான மலேசியன் மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்றுவருகிறது. இந்த ஆண்டு நடக்கும் முதல் தொடர் என்பதால், இந்தத் தொடர் பல்வேறு தரப்பினரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியா வீராங்கனை சாய்னாவை எதிர்த்து, பெல்ஜிய வீராங்கனை லியான் டான் ஆடினார். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய சாய்னா நேவால் 21-15, 21-17 என்ற நேர் செட்களில் வெற்றிபெற்றார். இந்தப் போட்டி 36 நிமிடங்களில் வரை நீடித்தது. இந்த வெற்றியை அடுத்து இரண்டாவது சுற்றுக்கு சாய்னா முன்னேறினார்.

சாய்னா

இதனிடையே ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்தை எதிர்த்து சீன வீரர் சௌடியன் சென் (Chou tien Chen) ஆடினார். அரை மணி நேரம் வரை நீடித்த இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே பின்னடைவைச் சந்தித்த கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-17, 21-5 என்ற செட்களில் சீன வீரரிடம் வீழ்ந்தார்.

சிந்து

இதையடுத்து இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்துவை எதிர்த்து ரஷ்ய வீராங்கனை எவகெனியா கொசட்ஸ்கயா (Evgeniya Kosetskaya) ஆடினார். இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை 21-15, 21-13 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இதையும் படிங்க: ஒரே நாளில் இரு ஹாட்ரிக்... பிக் பாஷ் அலப்பறைகள்!

ABOUT THE AUTHOR

...view details