தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பேட்மிண்டன்: காலிறுதிச் சுற்றில் சாய்னா நேவால்! - Saina Nehwal

வுஹான்: ஆசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

காலிறுதிச் சுற்றில் சாய்னா நேவால்

By

Published : Apr 25, 2019, 11:50 PM IST

ஆசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவின் வுஹான் நகரில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் இந்திய நட்சத்திரங்களான பி.வி.சிந்து, சமீர் வர்மா ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். தற்போது அந்த வரிசையில் இந்தியாவின் மற்றொரு பிரபல வீராங்கனையான சாய்னா நேவால் இணைந்துள்ளார்.

இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றுப் போட்டியில், சாய்னா நேவால், தென் கொரியாவின் கிம் காவை எதிர்கொண்டார்.ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய சாய்னா, 21-13, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று, காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 38 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.

இதைத்தொடர்ந்து, நாளை நடைபெற இருக்கும் காலிறுதிப் போட்டியில், சாய்னா, ஜப்பானின் மூன்றாம் நிலை வீராங்கனையான அகனே யமுகச்சியை எதிர்கொள்ள உள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details