இந்த ஆண்டுக்கான சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டின் ஃபுஷோ நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றிலேயே உலக சாம்பியனும் இந்திய நட்சத்திர வீராங்கனையுமான பி.வி. சிந்து அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் ஒன்பதாம் நிலை வீராங்கனை இந்தியாவின் சாய்னா நேவால், சீனாவைச் சேர்ந்த 22ஆம் நிலை வீராங்கனை கய் யான்யான்-உடன் பலப்பரீட்சை நடத்தினார்.