உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் 2019ஆம் ஆண்டுக்கான உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சுவிட்சர்லாந்தின் பசெல் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் நெதர்லாந்து நாட்டின் சோரயா டி விஸ்ச் இய்ஜ்பெர்கன் (Soraya de Visch Eijbergen) எதிர்கொண்டார்.
#BWFWorldChampionships: 3ஆவது சுற்றில் சாய்னா! - indian badminton
பசெல்: உலக பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சாய்னா நேவால் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
saina newal
இப்போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நேவால், சோராயா டி விஸ்சை 21-10, 21-11 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு சாய்னா நேவால் முன்னேறியுள்ளார்.