சுவிட்சர்லாந்தின்பாசெல் நகரில் சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.இதில், நேற்று நடைபெற்ற ஆடவர்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் சாய் பிரணித், ஒலிம்பிக் சாம்பியனும் சீன வீரருமான சென் லாங்குடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இப் போட்டியில் சாய் பிரணித் 21-18, 21-13 என்ற செட் கணக்கில் சென் லாங்கை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
சுவிஸ் ஓபனில் சென் லாங்கிற்கு 'ஷாக்' தந்த சாய் பிரணித்! - சாய் பிரணித்
பாசெல் நகரில் நடைபெற்று வரும் சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்திய வீரர் சாய் பிரணித், சீனாவின் சென் லாங்கை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
சாய் பிரணித்
இதன் மூலம் சென் லாங்குடன் மோதிய மூன்றாவது போட்டியில் மட்டுமே சாய் பிரணித், தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.இதைத்தொடர்ந்து, சுவிஸ் ஓபன் இறுதி சுற்றில் சாய் பிரணித், சீனாவின் ஷி யூகியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.