#DenmarkOpen2019: டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றை பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத், இருமுறை ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் லின் டானை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பு நிறைந்த இந்த ஆட்டத்தில் பிரனீத் முதல் செட்டை 21-14 என்ற கணக்கில் கைப்பற்றி லின் டானுக்கு அதிர்ச்சியளித்தார். அதனைத் தொடர்ந்து தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்த பிரனீத் இரண்டாவது செட்டையும் 21-17 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.