இந்த ஆண்டுக்கான ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டு தலைநகர் டோக்யோவில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்திய வீரர் சாய் பிரனீத், ஜப்பானின் கென்டா நீஷிமோடோவுடன் பலப்ரீட்சை நடத்தினார். இதில், சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய சாய் பிரனீத் 21-17, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று, அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
பேட்மிண்டன்: இரண்டாவது சுற்றில் சாய் பிரனீத் - பேட்மிண்டன்
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்திய வீரர் சாய் பிரனீத் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இரண்டாம் சுற்றில் சாய் பிரனீத்
இதேபோல் நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவுக்கான முதல் சுற்றில் இந்தியாவின் மனு அட்ரி / பி.எஸ். ரெட்டி ஜோடி 12-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் மலேசியாவின் கோஹ் / நூர் இஸுதின் (Goh/ Nur Izzuddin) இணையிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக்சாய்ராஜ் / அஷ்வினி பொன்னப்பா ஜோடி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.