நடப்பு ஆண்டுக்கான சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் ஃபுஷோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரவு, இரண்டாம் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத், டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆன்டான்செனுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சாய் பிரனீத் 20-22, 22-20, 16-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.
முன்னதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் பாருப்பள்ளி காஷ்யப் 13-21, 19-21 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்செனிடம் தோல்வி அடைந்தார்.