தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

SaarLorLux Open Super பேட்மிண்டன் தொடரில் இருந்து விலகிய சாய்னா நேவால் - சாய்னா நெஹ்வால்

சார்லோர்லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து இந்திய வீராங்கனை சாய்னா நேவால் விலகியுள்ளார்.

saina

By

Published : Oct 30, 2019, 7:42 PM IST

இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் சமீபத்தில் நடைபெற்ற பிரஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றார். கொரிய வீராங்கனையுடன் நடைபெற்ற போட்டியில் சாய்னா தோல்வியுற்றதால் பாதியிலேயே வெளியேறினார்.

இதனிடையே சார்லோர்லக்ஸ் (SaarLorLux) ஓபன் சூப்பர் 100 பேட்மிண்டன் தொடர் நேற்று ஜெர்மனியில் தொடங்கியது. இதிலிருந்து விலகுவதாக இந்திய வீராங்கனை சாய்னா அறிவித்துள்ளார். அவர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் கலந்துகொள்ளவே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்த சார்லோர்லக்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய கலப்பு இரட்டையர் ஜோடியான ரோஹன் கபூர், சஞ்சனா சந்தோஷ் ஆகியோர் 19-21, 21-13, 14-21 என்ற செட் கணக்கில் பிரஞ்சின் எலோய் ஆடம் மார்கரெட் லாம்பர்ட் இணையிடம் தோல்வியுற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details