சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவருகிறது. நேற்று (மார்ச் 5) நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிச்சுற்றில் இந்தியாவின் சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை - மலேசியாவின் ஆங் யூ சின், தியோ ஈ யி இணையுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இப்போட்டியின் முதல் செட்டை ஆங் யூ சின் இணை 21- 12 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரங்கிரெட்டி இணை 21-19 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை கைப்பற்றி ஆட்டத்தில் சமநிலையை ஏற்படுத்தியது.