தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#chinaOpen2019: முதல் சுற்றிலேயே கெத்துக்காட்டிய இந்திய இணை! - பிரவீன் ஜோர்டான், மெலதி டேவா

சீன ஓபன் பேட்மிண்டன் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரங்கிரெட்டி-பொன்னப்பா இணை வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது.

Rankireddy-Ponnappa

By

Published : Sep 17, 2019, 3:50 PM IST


சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் தற்போது அந்நாட்டின் சாங்ஸௌ (Changzhou) நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் கலப்பு இரட்டையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி-அஸ்வினி பொன்னப்பா இணை இந்தோனேசியாவின் பிரவீன் ஜோர்டன், மெலதி தேவா இணையை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ராங்கிரெட்டி-பொன்னப்பா இணை 22-20, 17-21, 21-17 என்ற நசெட்கணக்குகளில் பிரவீன்-மெலதி இணையை வீழ்த்தி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் உலகில் 26ஆவது நிலையில் உள்ள இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி-அஸ்வினி பொன்னப்பா இணை உலகின் ஏழாவது நிலையிலிருக்கும் பிரவீன்-மெலதி இணையை முதல் சுற்றிலேயே வீழ்த்தியதை இந்திய ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details