ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது, இதன் காலிறுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்துவை எதிர்த்து ஜப்பான் வீராங்கனை யமகுச்சி விளையாடினார்.
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் வெளியேறிய பி வி சிந்து! - பி வி சிந்து
டோக்கியோ: ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதியில் அகானே யமகுச்சியிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
பிவி சிந்து
இதில் போட்டியின் தொடக்கத்திலிருந்தே சிறப்பாக ஆடிய யமகுச்சி புள்ளிக் கணக்கில் தொடர்ந்து முன்னணியில் இருந்தார். முதல் செட்டை 21-18 என யமகுச்சி கைப்பற்ற, தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்தில் யமகுச்சி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதையடுத்து இரண்டாவது செட்டையும் 21-15 என்ற செட் கணக்கில் யமகுச்சி கைப்பற்றினார். இந்த தோல்வியின் மூலம் சிந்து ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து வெளியேறினார்.