சீன ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் சீனாவின் ஃபுஷோ நகரில் தொடங்கியுள்ளது. இந்தத் தொடரில் உலகின் முன்னணி பேட்மிண்டன் வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தாய்பெய் வீராங்கனை பாய் பூ போவை எதிர்கொண்டார்.
இப்போட்டியின் முதல் செட்டை 13-21 என்ற கணக்கில் இழந்த சிந்து, இரண்டாவது செட்டை 21-18 எனக் கைப்பற்றினார். இருப்பினும் தாய்பெய் வீராங்கனை 21-19 என்ற கணக்கில் கடைசி செட்டைக் கைப்பற்றியதால் சிந்து தோல்வியுற்றார்.