தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்திய ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து! - sindhu enters semi-finals

டெல்லி : இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் டேனிஷ் வீராங்கனை மியாவை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

பி.வி.சிந்து

By

Published : Mar 29, 2019, 10:13 PM IST

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி சிந்துவை எதிர்த்து டேனிஷ் வீராங்கனை மியா ஆடினார்.

தொடக்கம் முதலே இரு வீராங்கனைகளும் சிறப்பாக ஆடிய நிலையில், 21-19 என முதல் செட்டை சிந்து கைப்பற்ற நிலையில், இரண்டாவது செட்டிலும் தொடக்கம் முதலே சிந்து தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் மியாவும் சிந்து-வுக்கு ஈடுகொடுத்து ஆட ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இரண்டாவது செட்டின் இறுதியில் 22-20 என்ற கணக்கில் பி.வி.சிந்து வெற்றி பெற்று, அரையிறுதிக்கு போட்டிக்கு முன்னேறினார்.

ABOUT THE AUTHOR

...view details