தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: பி.வி. சிந்து முன்னேற்றம் - PV Sindhu enters second round of hong kong open

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அடுத்த சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளார்.

pv sindhu

By

Published : Nov 13, 2019, 2:16 PM IST

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று தொடங்கியது. இந்தத் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, தென் கொரியாவின் கிம் கா இயூனை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டிலிருந்து ஆதிக்கம் செலுத்திய சிந்து அந்த செட்டை 21-15 எனக் கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பி.வி. சிந்து 21-16 எனக் கைப்பற்றி நேர் செட்களில் தென்கொரிய வீராங்கனையை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் பி.வி. சிந்து இரண்டாவது சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற சீன ஓபன் தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறிய சிந்து இம்முறை வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது இந்திய ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் சீன வீராங்கனையிடம் 13-21, 20-22 என தோல்வியடைந்த இந்திய வீராங்கனை சாய்னா நேவால் இம்முறையும் முதல் சுற்றோடு வெளியேறி ஏமாற்றினார்.

ABOUT THE AUTHOR

...view details