இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் பாரிசில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, கனடாவின் மிச்செலி லீயுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
பிரெஞ்சு ஓபன்: 2ஆம் சுற்றில் சிந்து...! - பேட்மிண்டன்
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து முன்னேறியுள்ளார்.
Pv sindhu
முன்னதாக, சிந்து உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பிறகு சீனா, கொரியா, டென்மார்க் ஆகிய தொடர்களில் காலிறுதிக்கு முன்னேறாமலேயே வெளியேறினார். இதனால், பிரெஞ்சு ஓபன் தொடரிலாவது சிந்து மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.