உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் 2019ஆம் ஆண்டுக்கான உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சுவிட்சர்லாந்தின் பசெல் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, சீனாவின் தைபேவின் தாய் சூ யிங்கை(TAIPEI TAI TZU YING) எதிர்கொண்டார்.
#BWFWorldChampionships2019: ஐந்தாவது முறையாக அரையிறுதியில் சிந்து! - தைபேவின் தாய் சூ யிங்கை
பசெல்: உலக பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, சீனாவின் தைபேவினை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
BWF Championship Semifinal
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து முதல் செட்டை 12-21 என்ற கணக்கில் தைபேவின் தாய் சூவிடம் இழந்தார். அதன்பின் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து இரண்டாவது சுற்றை 23-21 என்ற புள்ளிக்கண்க்கில் வென்றார். மூன்றாவது செட்டில் பி.வி. சிந்து, 21-9 என்ற கணக்கில் தைபேவின் தாய் சூவை வீழ்த்தினார்.
இதன் மூலம் பி.வி.சிந்து 5ஆவது முறையாக உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.