தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தாய்லாந்து ஓபன்: காலிறுதியோடு வெளியேறிய சிந்து, சமீர்!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர், மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்களில் இந்தியாவின் பி.வி.சிந்து, சமீர் வெர்மா ஆகியோர் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினர்.

PV Sindhu crashes out of Thailand Open
PV Sindhu crashes out of Thailand Open

By

Published : Jan 23, 2021, 7:47 AM IST

பாங்காக்கில் நடைபெற்று வரும் இந்தாண்டிற்கான தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்று (ஜன. 22) நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து - தாய்லாந்தின் ராட்சனோக் இன்டனானை (Ratchanok intanon) எதிர்கொண்டார்.

பரபரப்பான இப்போட்டியில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ராட்சனோக் 21-13, 21-09 என்ற நேர் செட் கணக்கில் பி.வி.சிந்துவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச்சுற்றில் இந்தியாவின் சமீர் வெர்மா - டென்மார்க்கின் ஆண்டர்ஸ் அன்டன்சனை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் செட்டை ஆண்டர்ஸ் 21-13 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இரண்டாவது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சமீர் வெர்மா 21-19 என்ற கணக்கில் செட்டைக் கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட் ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய ஆண்டர்ஸ் 22-20 என்ற கணக்கில் வெற்றி பெற்று சமீர் வெர்மாவுக்கு அதிர்ச்சியளித்தார்.

இதன் மூலம் டென்மார்கின் ஆண்டர்ஸ் அன்டன்சன் 21-13, 19-21, 22-20 என்ற செட் கணக்கில் இந்தியாவின் சமீர் வெர்மாவை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இதன் மூலம் இந்தியாவின் பி.வி.சிந்து, சமீர் வெர்மா ஆகியோர் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிச்சுற்றோடு, தொடரிலிருந்து வெளியேறினர்.

இதையும் படிங்க:'டிராவிட் இளம் வீரர்களை மனரீதியாக வலிமையாக்கியுள்ளார்' - இன்சமாம் உல் ஹக்

ABOUT THE AUTHOR

...view details