தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பேட்மிண்டன்: அரையிறுதியில் பி.வி.சிந்து தோல்வி - பி.வி.சிந்து

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின், மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி சிந்து ஜப்பான் வீராங்கனை ஒகுஹாராவுடன் மோதி தோல்வி அடைந்தார்.

பி.வி.சிந்து தோல்வி

By

Published : Apr 13, 2019, 7:10 PM IST

இந்த ஆண்டுக்கான சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், ஆறாம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, மூன்றாம் நிலை வீராங்கனையான ஜப்பானின் ஒகுஹாராவை எதிர்கொண்டார்.

ஒகுஹாராவின் அசத்தலான ஆட்டத்தால், முதல் செட்டை பி.வி.சிந்து 7-21 என்ற கணக்கில் வீழ்ந்தார். இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாவது செட்டில், மீண்டும் ஒகுஹாராவின் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய பி.வி.சிந்து 11-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.

இதன் மூலம், பி.வி.சிந்து 7-21, 11-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து அரையிறுதிச் சுற்றோடு வெளியேறினார். முன்னதாக, நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் சாய்னா நேவால், ஒகுஹாராவுடன் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details