நடப்பு ஆண்டுக்கான ஹாங் ஓபன் பேட்மிண்டன் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில், ஏற்கனவே இந்திய வீரரான கிதாம்பி ஸ்ரீகாந்த் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இந்த நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நேவால் முதல் சுற்றில் தோல்வி அடைந்திருந்தாலும், மற்றொரு நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து இரண்டாவது சுற்றுக்கும் முன்னேறியிருந்தார்.
ஹாங்காங் தொடரில் சொதப்பிய சிந்து! - ஹாங் ஓபன் பேட்மிண்டன்
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரவு இரண்டாம் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
![ஹாங்காங் தொடரில் சொதப்பிய சிந்து!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5066211-156-5066211-1573754830333.jpg)
PV Sindhu
இன்று நடைபெற்ற இரண்டாம் சுற்றில் அவர், தாய்லாந்தின் புசனன் ஒங்பாம்ருங்பானுடன் (Busanan Ongbamrunphan) மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சிந்து 18-21, 21-11, 21-16 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். இதேபோல் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் பாருப்பள்ளி காஷ்யப் 21-12, 21-23, 10-21 என்ற செட் கணக்கில் தைவானின் செள தென் சென்னிடம் வீழ்ந்தார்.