நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 32ஆவது கோடைக்கால ஒலிம்பிக் போட்டி வரும் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறவுள்ளது. இதனிடையே, உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கோவிட்-19 வைரஸால் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளிலும் விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால், ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிகளைத் தள்ளிவைக்க வேண்டும் என இந்திய பேட்மிண்டன் தலைமைப் பயிற்சியாளர் புலேலா கோபிசந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒலிம்பிக் போட்டி நடைபெற இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. அதற்கான தயாரிப்புப் பணி தற்போது தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், கோவிட்-19 வைரஸால் ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எனக்கு எழுந்துள்ளது.