சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இந்த ஆண்டு ஜனவரி 12 முதல் 17ஆம் தேதிவரையும், பாங்காங் ஓபன் தொடர் ஜனவரி 19 முதல் 24ஆம் தேதிவரையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தொடருக்கான எட்டு பேர் கொண்ட இந்திய அணி ஜனவரி மூன்றாம் தேதி தாய்லாந்திற்குச் சென்றது.
அங்கு அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில், இந்திய வீரர்கள் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் ஒரு மணி நேரம் மட்டுமே பயிற்சி பெற அனுமதிக்கப்படுவதாகவும், தங்களது பிசியோ மற்றும் பயிற்சியாளர்களைக் காண எங்களை அனுமதிக்கவில்லை என்றும் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பிடம் முறையிட்டுள்ளார்.
இது குறித்து சாய்னா நேவாலின் ட்வீட்டில், "எங்கள் அனைவருக்கும் கரோனா தொற்று இல்லை எனப் பரிசோதனை முடிவுகள் தெரிவித்த பின்னரும், இந்தச் சுற்றுப்பயணத்தின்போது பிசியோ மற்றும் பயிற்சியாளர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுவருகிறது. இதனால் இந்த நான்கு வாரங்கள் நாங்கள் எப்படி செயல்பட முடியும். மேலும் நாங்கள் போட்டியை நல்ல நிலையில் விளையாட விரும்புகிறோம். அதனால் இந்தக் கரோனா நெறிமுறைகளை பிடபிள்யூஎஃப் முறைப்படுத்த வேண்டும்.