கோவிட்-19 வைரஸால் கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த ஆண்டுக்கான ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 15ஆம் தேதி முடிவுபெற்றது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் சாய்னா நேவால் முதல் சுற்றிலிருந்தும், பி.வி. சிந்து காலிறுதிப் போட்டியிலிருந்தும் வெளியேறினர்.
இந்த நிலையில், ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர், ”கோவிட் -19 வைரஸால் பல்வேறு நாடுகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், ஆல் இங்கிலாந்து ஓபன் தொடர் நடைபெற்றது முட்டாள்தனமாக இருந்தது. இந்தத் தொடர் தேவை தானா” எனக் கேள்வி எழுப்பினார்.