கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்சியான் நகரில் நடைபெற்றுவருகிறது. சாய்னா நேவால், பி.வி. சிந்து ஆகிய இந்திய நட்சத்திரங்கள் இந்தத் தொடரின் முதலிரண்டு சுற்றுகளிலேயே வெளியேறியபோது, தனிஒருவராக காஷ்யப் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் அவர், உலகின் முதல் நிலை மற்றும் உலக சாம்பியனான ஜப்பானை சேர்ந்த கென்டோ மொமோடாவை எதிர்கொண்டார்.
#Koreaopen: முடிவுக்கு வந்த காஷ்யப்பின் பயணம்! - பாருப்பள்ளி காஷ்யப்
கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் பாருப்பள்ளி காஷ்யப் தோல்வி அடைந்தார்.
parupalli kashyap
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், காஷ்யப் 13-21, 15-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால், கொரிய ஓபன் தொடரில் தொடர்ந்த பாருபள்ளி காஷ்யப்பின் வெற்றிப் பயணம் இப்போட்டியோடு முடிவுக்கு வந்துள்ளது.