சமீப காலமாக பாலிவுட்டில் பயோபிக் வகை படங்களின் வரவு அதிகரித்துள்ளது. எம்.எஸ்.தோனி: அண்டோல்டு ஸ்டோரி, சச்சின் : எ பில்லியன் ட்ரீம்ஸ், கோல்டு உள்ளிட்ட விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை படங்கள் பாலிவுட்டில் படமாவதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதில் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்று சாதனைப் படைத்தார். இவரது வாழ்க்கையைப் படமாக்குவதற்கானஅறிவிப்பு கடந்த வருடம் வெளியாகியது.
சாய்னாவாக நடிக்கும் பரினீதி சோப்ரா! - badminton player saina nehwal
டெல்லி : இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் பயோபிக் படத்திலிருந்து ஷ்ரத்தா கபூர் நீக்கப்பட்டு பரினீதி சோப்ரா ஒப்பந்தமாகியுள்ளார்.
அந்த படத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் சாய்னாவாக நடிக்க ஒப்பந்தமாகி முதல் போஸ்டர் வெளியாகியது. ஆனால் அவர் இந்த படத்திற்காக ஒதுக்கிய ஷுட்டிங் தேதிகளில் டெங்குவால் பாதிக்கப்பட்டதால், இந்த படம் தொடங்குவதில் தாமதமாகியது.
இந்த படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், தற்போது சாய்னாவாக நடிக்க இருந்த, ஷ்ரத்தா கபூரை நீக்கி பரினீதி சோப்ராவை ஒப்பந்தம் செய்துள்ளனர் தயாரிப்பு தரப்பினர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிர்வாகம் தங்களது டிவிட்டர் பக்கத்தில்வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையவுள்ளதாகவும், 2020 ஆம் ஆண்டு வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது. இந்த படத்தினை அமோல் குப்தே இயக்குகிறார்.