'தாய்லாந்து ஓபன் உலக சூப்பர் 500 பேட்மிண்டன்' தொடர் பாங்காக்கில் நடைபெற்றது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில், இந்தியாவின் சத்விக் சாய்ராஜ் ரான்கிரெட்டி / சிராக் ஷெட்டி ஜோடி, தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் சீனாவின் லி ஜூன்ஹுய் / லியு யுச்சென் (Li Junhui / Liu Yuchen) இணையை எதிர்கொண்டது.
சத்விக் சாய்ராஜ் ரான்கிரெட்டி / சிராக் ஷெட்டி இப்போட்டியில் இரண்டு ஜோடிகளும் தங்களது சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினர். இருப்பினும், இந்தியாவின் சத்விக் சாய்ராஜ் ரான்கிரெட்டி / சிராக் ஷெட்டி ஜோடி துல்லியமாக ஆடியது.
இறுதியில் 21-19, 18-21, 21-19 என்ற செட் கணக்கில் இந்த ஜோடி சீனாவின் லி ஜூன்ஹுய்/ லியு யுச்சென் இணையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது. இதன்மூலம், ஆடவர் இரட்டையர் பிரிவில் உலக சூப்பர் 500 தொடரை வென்ற முதல் இந்தியஜோடி என்ற சாதனையை படைத்தது. இதுமட்டுமின்றி, இந்த ஜோடி வெல்லும் முதல் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடர் ஆகும்.
வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் இந்த ஜோடி களத்திலேயே ஆனந்த கண்ணீர் வடித்தனர். நடப்பு ஆண்டில் ஒற்றையர் பிரிவில் எதிர்பார்த்த, பி.வி. சிந்து, சாய்னா நேவால், சாய் பிரனீத் ஆகிய நட்சத்திர வீரர்கள் எந்த ஒரு பதக்கம் பெறாமல் இருந்த நிலையில், சத்விக் சாய்ராஜ் ரான்கிரெட்டி / சிராக் ஷெட்டி ஜோடி தங்கம் வென்றது பேட்மிண்டன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.