தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பேட்மிண்டன்: காலிறுதி சுற்றில் சாய் பிரணித்

டெல்லி: இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் சாய் பிரணித், காஷ்யப் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

சாய் பிரணித்

By

Published : Mar 28, 2019, 7:34 PM IST

2019ஆம் ஆண்டுக்கான இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றில் இந்திய வீரர் சாய் பிரணித், சக நாட்டு வீரரான சமீர் வர்மாவுடன் மோதினார்.

முதல் செட்டை 18-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்த சாய் பிரணித், இரண்டாம் செட்டில் சிறப்பாக விளையாடினார். அதன் பலனாக 21-16 என்ற கணக்கில் வென்றார். இதனால், ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் பரபரப்பான மூன்றாவது செட்டிலும், தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய சாய் பிரணித் 21-15 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார்.

இதன் மூலம், இவர் 18-21, 21-16, 21-15 என்ற செட் கணக்கில் சமீர் வர்மாவை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதேபோல் நடைபெற்ற மற்றொரு இரண்டாம் சுற்றுப் போட்டியில், இந்திய வீரர் காஷ்யப் 21-11, 21-13 என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்தின் சீயன்சோம்பூன்சக்கை (Saensomboonsuk) வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இதைத்தொடர்ந்து, நடைபெற்ற மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றில் இந்திய வீராங்கனை ராணி முகர்ஜி 8-21, 21-17, 13-21 என்ற செட் கணக்கில் டென்மார்கின் மியா ப்ளிச்ஃபெல்டிடம் (Mia Blichfeld) தோல்வியடைந்தார்.

இதையடுத்து, நடைபெற்ற மகளிர் இரட்டை பிரிவு இரண்டாம் சுற்றில், இந்திய வீராங்கனை அபர்ணா பாலன், ஸ்ருதி இணை, 21-19, 7-21, 21-17 என்ற செட் கணக்கில் ஹாங்காங் நாட்டின் விங் யங் (Wing Yung), யெயங் ஙாட்டிங் இணையை( Yeung Nga Ting) தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

ABOUT THE AUTHOR

...view details