சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் தற்போது அந்நாட்டின் சாங்ஸௌ (Changzhou) நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சத்விக்சைராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை ஜப்பானின் தாகேஷி கமுரா, கெய்கோ சோனோடா இணையை எதிர்கொண்டது.
ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வந்த ரங்கிரெட்டி இணை கமுரா இணையின் அதிரடி ஆட்டத்தில் சிக்கி சிதைந்தது. ரங்கிரெட்டி இணை முதல் செட் கணக்கை 19-21 என்ற புள்ளிக்கணக்கில் கமுரா இணையிடம் பேராடி இழந்தது.