தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 8, 2020, 4:22 PM IST

ETV Bharat / sports

ஹெண்ட் ஷேக் கிடையாது; வணக்கம் மட்டுமே: பி.வி. சிந்து!

கொரோனா வைரஸ் தொற்றால் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் மற்ற வீரர், வீராங்கனைகளுடன் கை குலுக்காமல், வணக்கம் மட்டுமே வைப்போம் என இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தெரிவித்துள்ளார்.

No handshakes, only Namaste at All England Championships: PV Sindhu
No handshakes, only Namaste at All England Championships: PV Sindhu

சீனாவின் வூகான் மாகாணத்தில் முதலில் கண்டறியப்பட்ட ”கொரோனா வைரஸ்” தற்போது பல நாடுகளுக்கும் வேகமாக பரவிவருகிறது. உலகம் முழுவதும் இதுவரை ஒரு லட்த்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 3,600 பேர் உயரிழிந்துள்ளனர்.

இதனால், பல்வேறு விளையாட்டு போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கொரோனா வைரஸ் காரணமாக வரும் மார்ச் 11ஆம் தேதி பிர்மிங்ஹாமில் தொடங்கவுள்ள ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க மாட்டோம் என ஏழு இந்திய வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தத் தொடரின் போது கொரோனா வைரஸ் தொற்றிக்கொள்ளாமல் இருக்க, மற்ற வீரர், வீராங்கனைகளுடன் ஹேண்ட்ஷேக் செய்வதை தவிர்க்க வேண்டும் என இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

இந்தத் தொடரில் ஹேண்ட் ஷேக்கிற்கு பதிலாக மற்ற வீராங்கனைகளுக்கு வணக்கம் தெரிவிக்கவுள்ளனேன். நமது கைகளை எப்போதும் பாக்டீரியாக்கள் அண்டாதவாறு சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும். அதிக கூட்ட நெரிசலுடன் இருக்கும் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றார்.

முன்னதாக, கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க இந்திய வீரர்கள் யாரும் மற்ற வீரர்களை கட்டியணைக்க வேண்டாம் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:'இலங்கை வீரர்களுக்கு கை கொடுக்க மாட்டோம்' - ஜோ ரூட்

ABOUT THE AUTHOR

...view details