சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இந்த ஆண்டு ஜனவரி 12 முதல் 17ஆம் தேதிவரையும், பாங்காக் ஓபன் தொடர் ஜனவரி 19 முதல் 24ஆம் தேதிவரையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தொடருக்கான எட்டு பேர் கொண்ட இந்திய அணி இன்று தாய்லாந்துக்கு சென்றது. இந்நிலையில் இத்தொடரின் மூலம் கடந்த எட்டு மாதங்களுக்கு பிறகு பேட்மிண்டன் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இருப்பதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவிவந்தது.
இந்நிலையில் உலகின் நம்பர் ஒன் பேட்மிண்டன் வீரரான ஜப்பானின் கென்டோ மோமோட்டா இத்தொடரின் மூலம் சர்வதேச போட்டிக்கு ரீஎண்ட்ரி தர இருந்தார். ஆனால் இன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா கண்டறிதல் சோதனையில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து ஜப்பான் விலகுவதாக அந்நாட்டு பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. முன்னதாக கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனா, இத்தொடரிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தாய்லாந்து சென்ற சாய்னா & கோ!